பீகார் விரைவில் கிழக்கு இந்தியாவில் ஜவுளி ,சுற்றுலாவின் மையமாக மாறும் - பிரதமர் மோடி
பீகார் இளைஞர்கள் அனைவரும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.;
பாட்னா,
பீகார் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரஸ், ஆர்ஜேடி பீகாரின் அடையாளத்தை அழிக்க விரும்புகின்றன. வாக்காளர்கள் இரண்டு கட்சிகளைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகள் நடந்தன. ஜம்மு காஷ்மீரில் எந்த அரசாங்கமும் 370 வது பிரிவை ரத்து செய்ய முடியாது.
ஆனால் நான் ஒரு உத்தரவாதம் அளித்து அதைச் செய்தேன். பீகார் விரைவில் கிழக்கு இந்தியாவில் ஜவுளி மற்றும் சுற்றுலாவின் முக்கிய மையமாக மாறும். பீகார் இளைஞர்கள் அனைவரும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும். மாநிலத்தை பெருமைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தேர்தலுக்கு பிறகு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மோதி கொள்ளும். காங்கிரஸ் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க விரும்பவில்லை.
இரண்டு கட்சிகள் இடையே மிகப்பெரிய உட்கட்சி மோதல் நடந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து திட்டங்களும் மக்கள் முன் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.