நடுவானில் விமானத்தின் மீது மோதிய பறவை: அவசரமாக தரையிறக்கம்

விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக நாக்பூரில் தரையிறக்கினார்.;

Update:2025-10-26 00:54 IST

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா 466 ரக விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது நடுவானில் பறந்த சிறிது நேரத்தில் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதால் கோளாறு ஏற்பட்டது.

இதையறிந்த விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக மீண்டும் நாக்பூரில் தரையிறக்கினார். இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் விமான ஊழியர்கள் வந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்