பிட்காயின் மோசடி வழக்கு: சி.பி.ஐ. சோதனையில் ரூ.24 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல்

நாடு முழுவதும் நடந்த சி.பி.ஐ. சோதனையில் ரூ.24 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-02-27 00:41 IST

புதுடெல்லி,

ஜெயின்பிட்காயின் இணையதளம் உள்பட பல்வேறு தளங்கள் வழியாக நடந்த பிட்காயின் மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நீண்ட காலமாக நடந்து வரும் இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 60 இடங்களில் சோதனை நடந்தது.

அந்தவகையில் டெல்லி, புனே, நாண்டெட், கோலாப்பூர், மும்பை, பெங்களூரு, மொகாலி உள்பட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் 2 நாட்கள் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.23,94 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 34 லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க், 12 செல்போன்கள், 121 ஆவணங்கள் உள்பட ஏராளமான பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்