டெல்லியில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பாதுகாப்புடன் வெளியே அனுப்பப்பட்டனர்.;

Update:2025-09-20 13:40 IST

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக ஏராளமான பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து, போலீசார் சோதனை நடத்திய போது மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்நிலையில், இன்றுபிரபல பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிபிஎஸ் துவாரகா, கிருஷ்ணா மாடல் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பிரபல பள்ளிகளும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டலால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பாதுகாப்புடன் வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர்.

தகவலறிந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்து தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்