இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் 5,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update:2025-06-06 11:51 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 5,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 498 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 221 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்