மணிப்பூரில் 2 வீரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு சிஆர்பிஎப் வீரர் தற்கொலை
மணிப்பூரின் லாம்சாங் மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎப் முகாமில், 120 பட்டாலியனைச் சேர்ந்த வீரர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தனார்.;
மணிப்பூரின் மேற்கு இம்பாலில் நேற்று இரவு 8 மணிக்கு சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர், சக சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் மரணமடைந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சக சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னர், துப்பாக்கி சூடு நடத்திய சி.ஆர்.பி.எப் காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் இப்படி ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளது.