இல.கணேசனின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன் - பிரதமர் மோடி
தமிழகத்தில் பாஜகவை வளர்த்தவர் இல.கணேசன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
கீழே விழுந்ததால் தலையில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இல.கணேசன் மறைவு குறைத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர், தமிழகத்தில் பாஜகவை வளர்த்தவர். இல. கணேசனை பிரிந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என அதில் கூறியுள்ளார்.