டெல்லி: மேம்பாலத்தில் இருந்து ரெயில் தண்டவாளம் அருகே விழுந்த கார்
இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.;
புதுடெல்லி,
டெல்லியின் முகர்பா சவுக் ரெயில் மேம்பாலத்தில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென பாலத்தின் கைப்பிடி சுவரில் மோதி உடைத்து கொண்டு கீழே விழுந்தது. ரெயில் தண்டவாளம் அருகே கார் விழுந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. கார் டிரைவரும் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்டவாளம் அருகே கிடந்த காரை கிரேன் உதவியுடன் தூக்கி அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
கார் மேம்பாலத்தில் இருந்து ரெயில் தண்டவாளம் அருகே விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிதி பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.