டெல்லி: மத்திய மந்திரி வீட்டில் அரியானா, ராஜஸ்தான் முதல்-மந்திரிகள் சந்திப்பு
ராஜஸ்தானில் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.;
புதுடெல்லி,
அரியானாவில் முதல்-மந்திரி நயப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், டெல்லி சென்ற சைனி, மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீலை இன்று சந்தித்து பேசினார்.
அப்போது அவரை சந்திக்க ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மாவும் வந்துள்ளார். இந்நிலையில், மத்திய மந்திரி வீட்டில் அரியானா, ராஜஸ்தான் முதல்-மந்திரிகள் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் பரஸ்பரம் பூங்ககொத்துகளை பரிமாறி கொண்டனர்.
இதன்பின்னர் மத்திய மந்திரி பாட்டீலுடன் 2 முதல்-மந்திரிகளும் ஒன்றாக கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் மாநில உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதனை அரியானா முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
ராஜஸ்தானில் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.