மும்பை விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ஹைட்ரோபோனிக் கஞ்சா மண் இல்லாமல் குளிர்சாதன அறைகளில் வளர்க்கப்படுவை.;

Update:2025-08-07 23:49 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாங்காக்கில் இருந்து வந்த ஒரு விமானியின் உடமைகளை சோதனை செய்தபோது அவரின் டிராலி பையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.14.5 கோடி மதிப்புள்ள 14.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹைட்ரோபோனிக் கஞ்சா மண் இல்லாமல் குளிர்சாதன அறைகளில் வளர்க்கப்படுவை. இவை அதிக விலை போகக்கூடியது. இதனால் அண்டை நாடுகளில் இருந்து மும்பை வழியாக இந்தியாவுக்கு அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்