மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

மணிப்பூரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2024-11-22 11:50 IST

File image

இம்பால்,

மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.42 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 26.64 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.83 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. அதேபோல், நிலநடுக்கத்தின் தாக்கம் சிறிய அளவில் இருந்ததால் உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்