சகோதரன் கண்முன்னே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்... கொடூர சம்பவம்
சிறுமி தனியாக இருப்பதை கவனித்த வாலிபர் கவனித்தார் அவரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.;
கோப்புப்படம்
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சைதாபாத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறுமியும், அவரது 7 வயது சகோதரனும் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர். பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால் சிறுமி தனது சகோதரருடன் வீட்டில் இருந்தார்.
சிறுமி தனியாக இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் கவனித்தார். இந்த நிலையில் கஞ்சா போதையில் இருந்த அந்த வாலிபர் சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியை சரமாரியாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் சிறுமியையும், அவரது சகோதரனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றுள்ளார். இதனால் பயந்து போன இருவரும் இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.