அரசியல் கட்சி போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: காங்கிரஸ் விமர்சனம்

வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் குற்றசாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று விளக்கமளித்தது.;

Update:2025-08-17 17:31 IST

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஓட்டு திருட்டு நடப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை மறுத்து இன்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இது தொடர்பாக கூறியதாவது; - இந்திய அரசமைப்பின்படி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் 18 வயது பூர்த்தியானபின், ஒரு வாக்காளராக மாறுவதுடன் கட்டாயம் வாக்கு செலுத்தவும் வேண்டும். சட்டத்தின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்படுவதன் மூலமே அங்கீகரிக்கப்படுகிறது.

அப்படியிருக்கும்போது, தேர்தல் ஆணையம் இதே அரசியல் கட்சிகளிடம் எப்படிப் பாகுபாடு காட்ட இயலும்? பாரபட்சத்துடன் செயல்பட முடியும்? தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரையில், அனைவரும் சமமே. யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராயினும் தேர்தல் ஆணையத்துக்கு அதுவொரு பொருட்டல்ல. தேர்தல் ஆணையம் தமது அரசமைப்பு கடமையிலிருந்து பின்வாங்காது” என்றார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் விளக்கம் பற்றி காங்கிரஸ்  கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷமா முகம்மது கூறியிருப்பதாவது:- அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. அரசியல் கட்சி போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் போல நடந்து கொள்ளவில்லை. தீவிர வாக்காளர் திருத்த பட்டியலில் எத்தனை ரோஹிங்கியாக்கள், நேபாளிகள் கண்டறியப்பட்டனர் என்று கேட்டால் அதற்கு தெளிவான பதில் இல்லை” என்றுதெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்