நாளை தேர்தல்... பா.ஜ.க.வில் இருந்து விலகி ராஷ்டீரிய ஜனதா தளத்தில் இன்று இணைந்த எம்.எல்.ஏ.

2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.;

Update:2025-11-05 22:22 IST

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த சூழலில், பிர்பெயின்தி தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான லலன் குமார், இன்று அக்கட்சியில் இருந்து விலகி லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இன்று இணைந்துள்ளார்.

அவர் கட்சியில் இருந்து விலகியது பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தின் தனி தொகுதியான பிர்பெயின்தி தொகுதியில் முராரி பஸ்வானை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது. இதனால், அதிருப்தியடைந்திருந்த அவர், பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். அவர் பீகார் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் மற்றும் முன்னாள் மு ராப்ரி தேவி ஆகியோரை சந்தித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்