அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்த முடியாது என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update:2025-01-22 15:51 IST

மும்பை,

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராகேஷ் ஜெயின் என்பவர் மீது குல் அச்ரா என்பவர் பண மோசடி மற்றும் ஒப்பந்த மீறல் தொடர்பாக அமலாக்கத்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த விசாரணைக்கு எதிராக ராகேஷ் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி மிலிந்த் ஜாதவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மக்களை துன்புறுத்துவதன் மூலம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது என்றும் புலனாய்வு அமைப்புகள் சட்டத்தின் அளவுகோல்களுக்குள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அமலாக்க இயக்குனரகத்திற்கு ரூ.1 லட்சமும், ராகேஷ் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி அவர் மீது புகார் அளித்த அச்ராவுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்