கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை செல்லும்- தீர்ப்பாயம் உத்தரவு

கார்த்தி சிதம்பரம் சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட(பி.எம்.எல்.ஏ) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.;

Update:2025-11-01 04:53 IST

புதுடெல்லி,  

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லியிலுள்ள ரூ.16 கோடி சொத்துகளையும், 7 வங்கி கணக்கில் இருந்த சுமார் ரூ.7 கோடி பணத்தையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட(பி.எம்.எல்.ஏ) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட(பி.எம்.எல்.ஏ) தீர்ப்பாயம் விசாரித்தது. விசாரணை முடிவில், கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கை செல்லும் என்று கூறி கார்த்தி சிதம்பரத்தின் வாதத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்