விரைவு ரெயிலும் ரெயில்வே டிராலியும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி
தண்டவாளங்களை பராமரிக்கும் ரெயில்வே டிராலியுடன் விரைவு ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.;
பாட்னா,
பீகார் மாநிலம் கட்டிஹார் பகுதியில் பரவுனியில் இருந்து கட்டிஹார் நோக்கி ஆவாத் அசாம் விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்டவாளங்களை பராமரிக்கும் ரெயில்வே டிராலியுடன் விரைவு ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.