மாடு மேய்க்க சென்ற போது காட்டு யானை தாக்கி விவசாயி பலி

சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2025-07-23 03:55 IST

கோப்புப்படம் 

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (வயது 40). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்க்க சென்றார். இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர், கிராம மக்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால், வெள்ளிங்கிரியை காணவில்லை. இதுகுறித்து அட்டப்பாடி போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வெள்ளிங்கிரி இறந்து கிடந்தார். அவர் காட்டு யானை தாக்கி இறந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அட்டப்பாடியில் மல்லன் என்பவர் காட்டு யானை தாக்கி இறந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்