சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக உர்ஜித் படேல் நியமனம்

ரகுராம் ராஜனுக்கு பிறகு 2016-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக உர்ஜித் படேல் பணியாற்றினார்.;

Update:2025-08-29 20:40 IST

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலை, சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) நிர்வாக இயக்குனராக மத்திய அரசு நியமித்து உள்ளது.இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ‘பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான உர்ஜித் படேலை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் பதவிக்கு 3 ஆண்டுகளுக்கு நியமனம் செய்ய மத்திய மந்திரிசபையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் பணியில் இருப்பார்” என்று தெரிவித்தது.

ரகுராம் ராஜனுக்கு பிறகு 2016-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக உர்ஜித் படேல் பணியாற்றினார். இருப்பினும், தனிப்பட்ட காரணங்களைக் கூறி உர்ஜித் படேல் தனது பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன்பே 2018-ம் ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். வாஷிங்டனை தளமாக கொண்ட உலகளாவிய நிதி நிறுவனத்தில் இலங்கை, வங்காளதேசம், பூட்டான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இந்தியாவையும் உர்ஜித் படலே் பிரதிநிதித்துவப்படுத்துவார். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக வாரியத்தில், உறுப்பு நாடுகள் அல்லது குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நிர்வாக இயக்குனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்