லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லியில் கண் அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-12-20 17:25 IST

புதுடெல்லி,

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கண்புரை மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் மஹிபால் சிங் சச்தேவ் மேற்பார்வையின் கீழ் லாலு பிரசாத் யாதவுக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், உடல்நலம் முழுமையாக சீராகும் வரை வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்த தகவலை அவரது மகள் பாரதி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். மருத்துவக் குழுவினருக்கும், தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். 77 வயதான லாலு யாதவ், தற்போது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags:    

மேலும் செய்திகள்