மத்திய வேளாண் துறை மந்திரியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
மத்திய அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்தார்.;
டெல்லி,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று டெல்லியில் மத்திய வேளாண் துறை சிவராஜ் சிங் சவுகானை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக விவசாய திட்டங்கள், கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
மேலும், விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்தார். கவர்னர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது