செங்கல்லுக்கு ஜி.எஸ்.டி. குறைக்க வேண்டும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

செங்கல்லுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்;

Update:2025-09-14 02:09 IST

புதுடெல்லி,

அகில இந்திய செங்கல் மற்றும் ஓடு உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் நேற்று டெல்லியில் கூடி தங்களது தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசினர். செங்கல் தொழிலில் கடந்த 35 ஆண்டுகளாக வரிச்சுமையை பொதுமக்களுக்கு தராமல் தாங்களே அதை ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

செங்கல்லுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்ததாகவும், ஆனால் சமீபத்தில் நடந்த 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அது கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். எனவே, ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக ஆக்குவது பற்றி அறிவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த நேரிடும் என்றும் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்