திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதன் மூலம் தெய்வீக உணர்வை பெற்றேன் - பிரதமர் மோடி
மனம் மிகுந்த அமைதியையும் திருப்தியையும் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
பிரயாக்ராஜ்,
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதன் மூலம் தெய்வீக உணர்வை பெற்றேன். இங்கு வந்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
கோடிக்கணக்கான மக்களைப் போல் நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன். கங்கை தாய் அனைவருக்கும் அமைதி, அறிவு, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்க உணர்வை கொடுக்கட்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.