‘வந்தே மாதரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் அஞ்சுகிறது’ - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

பிரதமர் மோடியின் உரை எதிர்வரும் தலைமுறைகளுக்கு ஒரு முக்கியமான ஆவணமாக மாறும் என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.;

Update:2025-12-08 19:42 IST

புதுடெல்லி,

நாட்டின் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து இன்றைய விவாதத்தின்போது பா.ஜ.க. எம்.பி..யும், மத்திய மந்திரியுமான அனுராக் தாக்கூர் பேசியதாவது;-

“பிரதமர் மோடி வந்தே மாதரம் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார். வந்தே மாதரத்தின் 100-வது ஆண்டு விழாவின்போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்தி அரசியலமைப்பை அழித்தார். பிரதமர் மோடி தனது உரையில், வந்தே மாதரத்தின் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவத்தை முன்வைத்தார். இது எதிர்வரும் தலைமுறைகளுக்கு ஒரு முக்கியமான ஆவணமாக மாறும். வந்தே மாதரம் எவ்வாறு நாட்டை ஒன்றிணைத்தது என்பதை இது சொல்லும்.

இது வெறும் பாடல் அல்ல, ஒரு மகா மந்திரம். இது ஒரு மதம், ஒரு நபர் அல்லது ஒரு மாநிலத்தைச் சேர்ந்த பாடல் அல்ல. மாறாக நாட்டின் ஆன்மா, பெருமை மற்றும் லட்சியங்களின் பாடல். இது தேசத்தின் மீதான அன்பின் பாரம்பரியமாகும். அதனால்தான் காங்கிரஸ் இந்த பாடல் குறித்து அஞ்சுகிறது. பிரதமர் மோடி விவாதத்தைத் தொடங்கியபோது, ​​இவ்வளவு காலம் ஆட்சி செய்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள்(ராகுல் மற்றும் பிரியங்கா) அவையில் இல்லை.”

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்