சொத்துத்தகராறு: பெரியப்பா மகனை குத்திக்கொன்ற சகோதரர்கள்

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;

Update:2025-04-11 21:19 IST

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ஹண்டி மாவட்டம் ஹடம்டா கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் பாண்டு முண்டா, அச்சு முண்டா. இவர்களின் பெரியப்பா மகன் கங்கு முண்டா (வயது 35).

இதனிடையே, சகோதரர்களுக்கும், பெரியப்பா மகன் கங்கு முண்டாவுக்கும் இடையே சொத்துத்தகராறு நிலவி வந்தது.

இந்நிலையில், கங்கு முண்டா இன்று காலை கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு சென்ற பாண்டு, அச்சு தாங்கள் கொண்டுவந்த கூர்மையான ஆயுதத்தால் கங்கு முண்டாவை குத்திக்கொலை செய்தனர்.

பின்னர், பெரியப்பா மகனை கொன்ற பாண்டு முண்டா போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். மேலும், கொலை குறித்து போலீசிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் பாண்டு முண்டாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், குளத்தில் சடலமாக கிடந்த கங்கு முண்டாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய தலைமறைவான அச்சு முண்டாவை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்