மழைக்கால கூட்டத்தொடர்: இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது;

Update:2025-07-19 21:28 IST

டெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின. இந்தியா கூட்டணியில் உள்ள 24 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றன. ஆன்லைன் காணொலி காட்சி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எதிர்கொள்வது, முக்கிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தின.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்பட 24 கட்சிகள் பங்கேற்றன. 

Tags:    

மேலும் செய்திகள்