மகளை பள்ளியில் விட்ட நபர் மாரடைப்பால் வாசலிலேயே உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-12-23 13:48 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் புலந்தசகர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நபருக்கு மனைவி, மகள் உள்ளார். இந்நிலையில், அந்த நபர் நேற்று காலை தனது மகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

பள்ளிக்கூடத்தில் மகளை விட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல தயாராகியுள்ளார். அப்போது, அந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கூட வாசலிலேயே சரிந்து விழுந்த அவர் உயிரிழந்தார்.

பள்ளி வாசலில் அவர் மயங்கிய நிலையில் இருப்பதாக நினைத்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி வாசலில் நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்