நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

ஐஎன்எஸ் கவரத்தி போர் கப்பலில் இருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.;

Update:2025-07-09 02:38 IST

டெல்லி,

இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு சார்பில் புதிய ஆயுதங்களை சோதனை செய்து பாதுகாப்புப்படையில் இணைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் கவரத்தி போர் கப்பலில் இருந்து கடந்த 23ம் தேதி முதல் 7ம் தேதி வரை 17 முறை நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றியடைந்த நிலையில் ஏவுகணை கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்