இந்தியா - தாய்லாந்து கூட்டு ராணுவ பயிற்சி ; அடுத்த மாதம் தொடக்கம்
மேகாலயாவில் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறுகிறது.;
டெல்லி,
இந்தியா , தாய்லாந்து இடையே கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற உள்ளது. 14வது ஆண்டாக நடைபெறும் இந்த ராணுவ பயிற்சி அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. 14 நாட்கள் நடைபெறும் இந்த ராணுவ பயிற்சியில் இருநாட்டு ராணுவமும் பயங்கரவாத தடுப்பு உள்பட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
மேகாலயாவின் உம்ரொய் பகுதியில் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறுகிறது. சமீபத்தில் தாய்லாந்து, கம்போடியா இடையே போர் மூண்ட நிலையில் இந்த கூட்டு ராணுவ பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.