717 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ

கடந்த மாதம் இண்டிகோ நிறுவனத்தின் விமான புறப்பாடுகள் தடாலடியாக ரத்து செய்யப்பட்டன.;

Update:2026-01-25 18:58 IST

புதுடெல்லி,

மத்திய அரசு சமீபத்தில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. விமானிகளுக்கான புதிய தொழிலாளர் விதிமுறை காரணமாக பிரபல இண்டிகோ விமான நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடந்த மாதத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான புறப்பாடுகள் தடாலடியாக ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து விசாரணை நடத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் இண்டிகோ நிறுவனத்தின் 10 சதவீதம் சேவைகளை ரத்து செய்தது. இதன்விளைவாக பல்வேறு உள்நாட்டு விமான நிலையங்களில் இண்டிகோ நிறுவனம் 717 விமான புறப்பாடு மற்றும் நிறுத்தம் தொடர்பான ஒதுக்கீடுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதாவது அந்த நிறுவனம் இதுவரை இயக்கி வந்த 717 விமான சேவைகளை ரத்து செய்வதாக கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்