இந்திய தயாரிப்புகளில் தரத்திற்கு முன்னுரிமை அளிப்போம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.;

Update:2026-01-25 15:02 IST

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் (மன் கி பாத்) நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

அன்பான நாட்டு மக்களுக்கு வணக்கம். இது 2026-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி. நாளை ஜனவரி 26-ம் தேதி நாம் அனைவரும் குடியரசு தின விழாவை கொண்டாடுவோம். நமது அரசியலமைப்பு சட்டம் இந்த நாளில் தான் நடைமுறைக்கு வந்தது.

நாம் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவது போலவே, ஒரு 18 வயது நிரம்பிய அனைவரும் முதல் முறையாக வாக்காளராகும்போதெல்லாம், முழு சுற்றுப்புறம், கிராமம் அல்லது நகரம் ஒன்று கூடி அவர்களை வாழ்த்தி இனிப்புகளை வழங்க வேண்டும். இது வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றும் வாக்காளராக இருப்பது எவ்வளவு முக்கியம் என்ற உணர்வை வலுப்படுத்தும் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராகப் பதிவு செய்யுங்கள். இந்தியா உலகின் 3-வது பெரிய ஸ்டார் அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது. இன்று நமது கலாசாரமும், பண்டிகைகளும் உலகம் முழுவதும் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றன.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் இந்திய பண்டிகைகள் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகின்றன. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் நமது கலாசாரத்தை பாராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் தங்கள் கலாசாரத்தின் சிறம்பம்சங்களை பாதுகாத்து ஊக்குவிக்கின்றனர்.

தமிழ் மொழியை கற்பிப்பித்தோடு மட்டுமல்லாமல் பிற பாடங்களும் தமிழில் கற்பிக்கப்படுகின்றன. மேலும் தெலுங்கு மற்றும் பஞ்சாபியுடன், பிற இந்திய மொழிகளிலும் கற்பிக்கப்படுகிறது, இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும். இப்பொழுது தரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது.

நேற்றையதை விட இன்று சிறந்த தரமாக இருக்க வேண்டும். நாம் எவற்றையும் எல்லாம் தயாரிக்கிறோமோ அவற்றை தரமாக தயாரிக்க வேண்டும். இந்திய பொருட்கள் என்றால் உயர்வான தரம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அது நமது ஜவுளி, தொழில்நுட்பம், மின்னணுவியல் அல்லது பேக்கேஜிங் கூட தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது. இதன் மூலம் மட்டும் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய முடியும்.

மேற்கு வங்காளத்தின் கூச் பெஹாரில் வசிக்கும் பெனாய் தாஸ், தனது மாவட்டத்தை பசுமையாக்க தனி ஒருவராக உழைத்துள்ளார். பெனாய் தாஸ் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ளார். மரக்கன்றுகளை வாங்குதல், நடுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முழு செலவையும் அவர் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டுள்ளார். தேவையான இடங்களில், உள்ளூர் மக்கள், மாணவர்கள் மற்றும் நகராட்சி அமைப்புகளுடன் அவருக்கு ஒத்துழைப்பை அளித்துள்ளன. அவரது முயற்சிகள் மூலம், சாலையோரங்களில் உள்ள பசுமை மேலும் மேம்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்திஷ் பிரசாத் அஹிர்வார் ஜி, காட்டில் ஒரு பீட்-கார்டாகப் பணியாற்றுகிறார். காட்டில் உள்ள பல மருத்துவ தாவரங்கள் பற்றிய தகவல்கள் எங்கும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதை அவர் உணர்ந்தவுடன். ஜக்திஷ் ஜி மருத்துவ தாவரங்களை அடையாளம் கண்டு பதிவு செய்யத் தொடங்கினார். அவர் 125 க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்களை அடையாளம் கண்டுள்ளார். அவர் புகைப்படம் மற்றும் ஒவ்வொரு தாவரத்தின் பெயர், பயன்பாடு மற்றும் இருப்பிடம் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். வனத்துறை தகவல்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.

இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த உச்சிமாநாட்டிற்காக இந்தியா வருவார்கள். இந்த உச்சிமாநாடு ஏஐ உலகில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளையும் எடுத்துக்காட்டும்.

அடுத்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் ஏஐ தாக்கம் குறித்து பேசுவோம். நாட்டு மக்களின் வேறு சில தானைகளை பற்றியும் விவாதிப்போம். மீண்டும் ஒருமுறை தேசிய வாக்காளர் தினம் மற்றும் குடியரசு தினத்திற்கு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்