கேரளாவில் கார் விபத்து; அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பிய கலெக்டர்

சீட் பெல்ட்டால் நான் காப்பாற்றப்பட்டேன் என கேரளாவில், கார் விபத்தில் உயிர் தப்பிய கலெக்டர் கூறியுள்ளார்.;

Update:2026-01-25 14:59 IST

பத்தனம்திட்டா,

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் அவருடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில் விரைவாக வந்த கார் ஒன்று அவருடைய வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

கொன்னி என்ற பகுதியருகே நடந்த இந்த விபத்தில், காரில் இருந்த க பிரேம், பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி கலெக்டர் பிரேம் இன்று கூறும்போது, வாகனத்தின் பின்புறத்தில் நான் அமர்ந்திருந்தேன். சீட் பெல்ட்டும் அணிந்திருந்தேன். இதனால், கார் மோதியபோதும் வாகனத்தின் உள்ளே தூக்கி வீசப்படவில்லை. பாதுகாப்பாக இருந்தேன். உள்ளூர்வாசிகளும் உடனடியாக ஓடி வந்து என்னை எளிதில் வெளியே கொண்டு வந்தனர் என கூறினார்.

விபத்து பற்றி கூறிய அவர், நாங்கள் எங்களுடைய வழியில் பயணித்து கொண்டு இருந்தோம். ஆனால், தவறான திசையில் எதிரில் விரைவாக கார் வந்தது. எங்கள் ஓட்டுநர் காரை மோதலில் இருந்து தவிர்க்க முயன்றபோதும், அந்த கார் எங்களுடைய வாகனம் மீது மோதியது.

சீட் பெல்ட்டால் நான் காப்பாற்றப்பட்டேன் என்றார். இந்த சம்பவத்தில், காரில் இருந்த 4 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்