என்ஜின் கோளாறு; இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் கோவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.;

Update:2025-07-17 13:07 IST

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து கோவாவிற்கு சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.

கோவா விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக நேற்றிரவு 9.53 மணிக்கு தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பணிகள் 191 பேரும் வெளியேற்றப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் கோவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி விமான நிலையத்தில் இருந்து கோவா நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்