இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் வந்த வினை: மாணவியை வீடுபுகுந்து பலாத்காரம் செய்த 4 சிறுவர்கள்

பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை, மாணவியின் தாய் அறையில் அடைத்து வைத்தார்.;

Update:2025-07-17 02:44 IST

கோப்புப்படம் 

லக்னோ,

இன்றைய காலத்தில் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதன் மூலம் அவர்களது படிப்பு, வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் தவறானவர்களுடன் ஏற்படும் நட்பு பெரும் விபரீதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. பள்ளி விடுமுறை தினத்தில் வீட்டில் இருந்த மாணவி, தனது வீட்டுக்கு வருமாறு இன்ஸ்டாகிராம் நண்பனுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லை.

சிறிது நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டது. தனது நண்பன் வந்துவிட்டான் என்ற ஆவலில் கதவை திறந்த மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டு வாசலில் மாணவியின் நண்பனுடன் மேலும் 3 சிறுவர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் 4 பேரும் வீட்டுக்குள் புகுந்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த நேரத்தில் வெளியே சென்று இருந்த மாணவியின் தாய் வீடு திரும்பினார்.

வீட்டுக்குள் மகள் இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், உடனடியாக தனது மகளை வெளியே இழுத்து வந்தார். பின்னர் அந்த 4 சிறுவர்களையும் அதே அறையில் வைத்து பூட்டிவிட்டு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

இந்த விவகாரம் அந்த குடியிருப்பில் உள்ள சிலருக்கும் தெரியவந்தது. போலீஸ் வழக்கு என்று வந்துவிட்டால் தங்களது குடியிருப்பின் மதிப்பு கெட்டுவிடும் என்று கருதிய அந்த குடியிருப்பின் சங்க நிர்வாகிகள் சிலர், போலீசார் வருவதற்குள், அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்களையும் வெளியேற்றினர்.

நடந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை, கவிநகர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரில் 3 பேர் மாணவியுடன் படிக்கும் மாணவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்