சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்
இந்த வழக்கு தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
பத்தனம்திட்டா,
சபரிமலையில் உள்ள துவார பாலகர் சாமி சிலைகள் மற்றும் கோவில் கதவு சட்டத்தில் இருந்து தங்கம் மாயமானதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையை 6 வாரங்களுக்குள் முடிக்கவும், 2 வாரங்களில் நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் நீதிபதிகள் விஜயராகவன், விஜயகுமார் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தாக்கல் செய்வார்கள் என விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.