வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா பயணம்

குவாட் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.;

Update:2025-06-30 10:08 IST

 

டெல்லி,

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்கா செல்லும் ஜெய்சங்கர் இன்று நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் பயங்கரவாதத்தால் ஏற்படும் மனித இழப்பு என்ற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

இதனை தொடர்ந்து நாளை நடைபெறும் குவாட் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டிலும் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாக குவாட் அமைப்பு உள்ளது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குவாட் மாநாட்டில் ஜெய்சங்கர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்