பறக்கும் படை சோதனை: ரூ.34 கோடி ரொக்கம், மதுபாட்டில்கள் சிக்கின
கடந்த 6-ந் தேதியில் இருந்து இதுவரை மொத்தம் ரூ.34 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.;
பாட்னா,
தேர்தலையொட்டி பீகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களை கவர ரொக்கப்பணமோ, இலவச பொருட்களோ வழங்கப்படுவதை கண்காணித்து தடுக்க பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த 6-ந் தேதியில் இருந்து இதுவரை வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்ட ரொக்கப்பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள், இலவச பொருட்கள் என மொத்தம் ரூ.34 கோடி மதிப்புள்ள பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.