கெஜ்ரிவால் பயன்படுத்திய ஆடம்பர பங்களா விற்பனை? டெல்லி முதல்-மந்திரி பேட்டி

ஆடம்பர பங்களாவை பராமரிப்பதைவிட மக்களுக்கு சேவை செய்வதே முக்கியமானது என்று டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.;

Update:2025-09-10 21:10 IST

புதுடெல்லி,

டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக இருந்தபோது பிளாக்ஸ்டாப் சாலையில் அவர் வசித்து வந்த முதல்-மந்திரியின் பங்களாவான ‘ஷீஷ் மகால்’ ரூ.53 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இது வீணான ஆடம்பர செலவு என பா.ஜனதாவினர் குற்றம் சாட்டினர். அதன்பிறகு நடந்த தேர்தலிலும் இது எதிரொலித்தது. இதுபோன்ற காரணங்களால் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது. இந்தநிலையில் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துள்ள பா.ஜனதா, அந்த ஆடம்பர பங்களாவை என்ன செய்யப்போகிறது? என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருந்தனர். இதுகுறித்து டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஷீஷ் மகால் ஒரு வெள்ளை யானை என்றும், அதை பராமரிப்பதைவிட மக்களுக்கு சேவை செய்வதே முக்கியமானது என்றும் கூறினார். அதனை அருங்காட்சியகமாகவோ, விருந்தினர் மாளிகையாகவோ மாற்றலாம் அல்லது விற்கப்படலாம். இதுபற்றி மந்திரிசபை, சட்டசபை முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த மாளிகையை பராமரிப்பதற்கு மாதம் ரூ.31 லட்சம் செலவிட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்