கேரளா: ஐ.டி. பூங்காக்களில் மதுபான விநியோகத்திற்கு மாநில அரசு அனுமதி
ஐ.டி. பூங்காக்களில் மதுபான விநியோகத்திற்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரள அரசு, மாநிலம் முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப (IT) பூங்காக்களுக்குள் மதுபானங்களை வழங்க அனுமதிக்கும் வகையில் அதன் வெளிநாட்டு மதுபான விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
இதன்படி கேரளாவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் (IT Park) மதுபான விநியோகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த வகை லைசன்ஸ் மூலம் ஐ.டி. பூங்காக்களில் பணியாற்றும் நபர்களைத் தவிர, பிறருக்கு மதுபானம் விநியோகம் இருக்கக் கூடாது எனவும் மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.