கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு: விஷு பம்பர் டிக்கெட் முடிவுகள் வெளியீடு

ரூ.300 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படுகிறது.;

Update:2025-05-29 13:44 IST

திருவனந்தபுரம்,

கேரளாவில் விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நேற்று நடைபெற்றது. ரூ.300 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இந்த டிக்கெட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்தது. 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், சுமார் 43 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் மே 28-ந் தேதி நடைபெறும் என்று கேரள லாட்டரிதுறை அறிவித்து இருந்தது. இதன்படி, இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்றுறு நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ. 12 கோடி -VD 204266- என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி 6 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. VA 699731, VB 207068, VC 263289, VD 277650 , VE 758876, VG 203046 - என்ற எண்களுக்கு இரண்டாவது பரிசு வழங்கப்படுகிறது. முதல் பரிசு விழுந்த டிக்கெட் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் வாங்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்