சுங்க சாவடியில் கேட் போட்டும்... கட்டணம் செலுத்தாமல் பறந்த சொகுசு கார்; வைரலான வீடியோ

அழகான அந்த காருக்கு ஏற்பட்ட அவமதிப்பு இது என ஒருவர் பதிவிட்டு உள்ளார்.;

Update:2025-11-18 13:08 IST

புதுடெல்லி,

நாட்டில் வாகனங்கள் விரைவாக செல்லவும், பாதுகாப்பான சொகுசு பயணம் அமையவும் நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தொலைவுக்கு பயணிக்க ஏதுவாக உள்ள இந்த சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் அந்த சாலையின் பராமரிப்பு, கட்டமைப்பு உள்ளிட்ட விசயங்களுக்கு பயன்படுத்தப்படும்.

இந்நிலையில் சொகுசு கார் ஒன்று, சுங்க சாவடியில் கேட் போட்டும் கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக நிற்காமல் சென்றுள்ளது. அதற்கு காரணம் அதன் வடிவம்தான். சுங்க சாவடியின் தடுப்பு கம்பத்திற்கும் கீழே எளிதில் செல்லும் அளவிலேயே அதன் உயரம் உள்ளது. இதனால், அதிக விலையுயர்ந்த அந்த காரை ஓட்டி வந்த நபர், மெதுவாக காரை ஓட்டி சென்று பின்னர் வேகம் எடுத்து பறந்து விட்டார். அப்போது சுங்க சாவடியின் ஊழியர் காரை நிறுத்த கூறியும் கேட்கவில்லை.

இந்த வீடியோ வைரலானபோது நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். விலையுயர்ந்த காரை வாங்கியபோதும், சிறிய தொகையை செலுத்த மனமில்லை என சிலரும், ஆடம்பர காரை வைத்திருந்தபோதும், அதற்கு ஈடாக நல்ல குணம் இல்லை என ஒருவரும், இது அந்த அழகான காருக்கு ஏற்பட்ட அவமதிப்பு என மற்றொருவரும் பதிவிட்டு உள்ளனர்.

குறிப்பிட்டு கூறுவதென்றால், உலகின் அனைத்து வளங்களும் கிடைக்க பெற்றாலும் கூட உண்மையில், சிறந்த பண்பை விலை கொடுத்து வாங்க முடியாது என பலரும் விமர்சித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்