சமூக ஊடகத்தில் பாகிஸ்தான் வாழ்க என பதிவிட்ட நபர் கைது

போலீசார் அந்த நபரை காவலில் எடுத்து விசாரித்தனர். இதன்பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.;

Update:2025-05-05 04:22 IST

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் இட்டா மாவட்டத்தில் ஜலேசார் பகுதியில் உள்ள ஹசன்கார் கிராமத்தில் வசித்து வருபவர் பைசன் கான். இவர், அவருடைய சமூக ஊடக கணக்குகளில் ஒன்றில், பாகிஸ்தான் வாழ்க என்ற அர்த்தத்தில் பதிவை வெளியிட்டு உள்ளார்.

இதுபற்றி காவல் அதிகாரி ஞானேந்திர பிரதாப் சிங் கூறும்போது, சமூக ஊடகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த நபர் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். இதன்பின்னர், சிறையில் அடைக்கப்பட்டார் என கூறினார்.

பைசன் கானுக்கு எதிராக புதிய குற்றவியல் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் முழு அளவிலான விசாரணை நடந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்