டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது
ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.;
டெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன் தினம் இரவு 11மணியளவில் மர்ம நபர் போன் செய்தார். அந்த நபர் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
இது குறித்து காசியாபாத் போலீசார் டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர். மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பாக தொலைதொடர்பு நிறுவனத்தின் உதவியை போலீசார் நாடினர்.
தீவிர விசாரணையில் முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது டெல்லியின் பஞ்ச்வாலி பகுதியை சேர்ந்த ஸ்லோக் திரிபாதி (வயது 25) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் ஸ்லோக் திரிபாதியை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திரிபாதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.