கர்ப்பிணியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய கொடூர கணவன்

மகேந்தரும் சுவாதியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்;

Update:2025-08-24 16:28 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் விக்ராபாத் மாவட்டம் கமரெட்டிகுடா கிராமத்தை சேர்ந்தவர் மகேந்தர். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சுவாதி (வயது 22) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மெடிபல்லி நகரின் பொடுபல் பகுதியில் குடியேறினர். இதனிடையே, மகேந்தருக்கும் அவரது மனைவி சுவாதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கணவன் மனைவி இடையே நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுவாதியை கழுத்தை நெரித்து மகேந்தர் கொலை செய்தார். பின்னர், கர்ப்பிணி மனைவியின் உடலை ரம்பம் கொண்டு துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டியுள்ளார்.

இதையடுத்து, வெட்டப்பட்ட உடல் பாகங்கள் சிலவற்றை முசி ஆற்றில் வீசியுள்ளார். மேலும், எஞ்சிய உடல் பாகங்களை ரம்பத்தால் வெட்டியுள்ளார்.

இதனிடையே, மகேந்திர் வீட்டில் ரம்பத்தால் அறுக்கும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு வீட்டில் ரத்தக்கரை, உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அவர் போலீசில் தெரிவித்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கர்ப்பிணி மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டிய மகேந்தரை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்