நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்

மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சிம்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update:2025-11-01 20:14 IST

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் லோஹர் கொச்சா கிராமத்தை சேர்ந்தவர் சிம்பு. இவரது மனைவி ரஹில் கஷெப் (வயது 40). இதனிடையே, மனைவியின் நடத்தையில் சிம்புவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அடிக்கடி மனைவியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் கணவன் , மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சிம்பு தனது மனைவி ரஹில் கஷெப்பின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தினருக்கு காலை தகவல் தெரிவித்துள்ளது. உடனடியாக கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ரஹில் கஷெப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சிம்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்