கேன்டீனில் பீப் உணவுக்கு தடை விதித்த மேனேஜர்: வங்கி ஊழியர்கள் நடத்திய நூதன போராட்டம்

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாக கேன்டீனில் மாட்டிறைச்சி பயன்படுத்த தடை மேலாளர் தடை விதித்து இருக்கிறார்.;

Update:2025-08-30 21:51 IST

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் கொச்சியில் கனரா வங்கி உள்ளது. இந்த வங்கியில் கேன்டீன் வசதி உள்ளது. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள் இந்த கேன்டீனை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், சமீபத்தில் பீகாரை சேர்ந்த ஒருவர் கொச்சி கனரா வங்கியின் பிராந்திய மேலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் பணிக்கு சேர்ந்ததும், வங்கி கேன்டீனில் மாட்டிறைச்சி உணவுக்கு தடை விதித்தார். இதனால் கொதித்தெழுந்த வங்கி ஊழியர்கள் நூதன போராட்டத்தை கையில் எடுத்தனர். அதாவது,

பிராந்திய மேலாளரின் அலுவலகம் முன்பு வங்கி ஊழியர்கள் திரண்டு கேன்டீனில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டதற்கு எதிராக கோஷமிட்டனர். அதுமட்டுமின்றி புரோட்டாவுடன் மாட்டிறைச்சி சேர்த்து சாப்பிட்டனர். திருவிழா போல் அவர்கள் மாட்டிறைச்சியை பகிர்ந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், “கொச்சி கனரா வங்கியின் மேலாளராக அண்மையில் பிஹாரை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், கொச்சி கனரா வங்கியில் உள்ள கேன்டீனில் பீஃப் உணவு விற்கக் கூடாது, ஊழியர்கள் பீஃப் உணவு கொண்டுவந்து சாப்பிடக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார். இதனையடுத்து நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ” என்றனர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்