ரெயில் கட்டணம் உயர்வு: 26ம் தேதி முதல் அமல்

500 கிலோ மீட்டர் வரையிலான ரெயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது என ரெயில்வே தெரிவித்துள்ளது.;

Update:2025-12-21 12:59 IST

புதுடெல்லி,

ரெயில் கட்டணம் வரும் 26 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண வகுப்புகளில் 215 கி.மீக்கு மேல் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கிறது. 500 கிலோ மீட்டர் வரையிலான ரெயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. மெயில் மற்றும் விரைவு ரெயில்களில்  கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரெயில் கட்டண உயர்வு மூலம் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் ரெயில் டிக்கெட் கட்டணமானது வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

புறநகர் ரெயில் சேவைகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும், சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் உயர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டணம் உயர்வு இல்லை என ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்