மணிப்பூர்: தடை செய்யப்பட்ட இயக்க பயங்கரவாதிகள் 9 பேர் கைது

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட 2 வெவ்வேறு இயக்கங்களின் 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.;

Update:2025-02-15 12:51 IST

இம்பால்,

மணிப்பூரில் இம்பால் கிழக்கு மற்றும் தவுபால் ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த சிலர் கடத்தல் மற்றும் மிரட்டி, பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என போலீசாருக்கு தகவல் சென்றது.

இதனை தொடர்ந்து, போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடத்தும் செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், எறிகுண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், நாட்டுத்துப்பாக்கி, சீனாவில் தயாரான ஆளில்ல விமானம் ஒன்று உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்