அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல; கொல்கத்தா சோதனை பற்றி அமலாக்க துறை விளக்கம்
சோதனையின்போது 2 இடங்களில், அரசியல் சாசன அதிகாரம் படைத்தவர்கள் உள்ளே புகுந்து, ஆவணங்களை பறித்து சென்றனர் என அமலாக்க துறையினர் கூறினர்.;
கொல்கத்தா,
இந்தியா முழுவதும் தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களின் 15 இடங்களில் அமலாக்க துறை இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டது. பீகாரில் 3 இடங்கள், மேற்கு வங்கத்தில் 2 இடங்கள், கேரளாவில் 4 இடங்கள், தமிழ்நாட்டில் ஒன்று, குஜராத்தில் ஒன்று மற்றும் உத்தரபிரதேசத்தில் 4 இடங்கள் என மாநில போலீசாரின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடந்தது.
அரசின் பல்வேறு துறைகளில், வேலைவாய்ப்பு பணி நியமனங்களை பெற்று தருகிறோம் என பொய்யாக கூறி வேலைவாய்ப்பு மோசடியில் கும்பல்கள் அமைப்பாக ஈடுபட்டு வருகின்றன என கிடைத்த தகவலை தொடர்ந்து, இந்த சோதனை நாடு முழுவதும் பரவலாக நடந்தது.
இதில், மேற்கு வங்காளத்தில் நடந்த சோதனையின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தரவுகள், லேப்டாப்புகள், செயல்திட்டங்கள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை அமலாக்க துறை கைப்பற்றி கொண்டனர். அவர்களுடைய தடய அறிவியல் நிபுணர்கள், எல்லா தரவுகளையும் அவர்கள் தரப்புக்கு மாற்றி விட்டனர்.
வாக்காளர் பட்டியலுக்கான எஸ்.ஐ.ஆர். பணிகளுடன் தொடர்புடைய தரவுகள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்க துறை அதிகாரிகள் கைப்பற்றி கொண்டு சென்று விட்டனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இது ஒரு குற்றம் என்றே நான் நம்புகிறேன் என கூறினார்.
அரசியல் ரீதியாக பதிவு செய்யப்பட்டது எங்களுடைய கட்சி. வருமானவரியை ஒழுங்காக சமர்ப்பித்து வருகிறோம். அமலாக்க துறைக்கு ஏதேனும் தகவல் தேவையென்றால், அதனை வருமானவரி துறையிடம் இருந்து பெற்று கொள்ளலாம். எங்களுடைய கட்சியின் ஐ.டி. துறையில் சோதனை நடத்துவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளித்து அமலாக்க துறையினர் கூறும்போது, எங்களுடைய சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. சட்டரீதியான பாதுகாப்பு நடைமுறைகளுடனேயே இதனை மேற்கொள்கிறோம். சோதனையின்போது 2 இடங்களில், அரசியல் சாசன அதிகாரம் படைத்தவர்கள் உள்பட சிலர் வந்து, உள்ளே புகுந்து, அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஆவணங்களை பறித்து சென்றனர் என கூறினர்.