ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
தீ மளமளவன தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டர் 2 பகுதியில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவன தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.